Suffering from the game of blue valley game : Thirunelveli district student suicide attempt
பத்தமடையை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் புளூவேல் விளையாட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
புளுவேல் விளையாட்டால் தற்போது பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். அந்தளவுக்கு பல மாணவர்கள், வாலிபர்களை புளுவேல் மோகம் ஆட்டிப் படைக்கிறது.50 நாட்கள் விளையாடும் இந்த விளையாட்டின் முடிவில் விளையாடுபவர் தற்கொலை செய்து கொள்ளவேண்டும்.
மதுரையில் விக்னேஷ் என்ற கல்லுாரி மாணவர் சில தினங்களுக்குமுன் தற்கொலை செய்தது தமிழகம் முழுதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.மேலும் பல மாணவர்கள் இந்த ஆபத்தான விளையாட்டை விளையாடிக் கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் புளூவேல் விளையாட்டால் தற் கொலை முயற்சியில் ஈடுபட்டார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவரை பாளையங்கோட்டையில் தனியார் மனநல மருத்துவ மனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.