Tampering came for treatment to a woman: 20 people laid down on the job
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய பணியாளர் உள்பட 20 பேரை மருத்துவமனை நிர்வாகம் துணிச்சலாக வேலையை விட்டு நீக்கியது.
பெரம்பலூர் நகரை ஒட்டிய உள்ள மருத்துவமனை ஒன்றில் வாலிகண்டபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர், தீவிர சிகிச்சை பெற்று வந்த சற்று மயக்க நிலையில் இருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவ பணியாளர் ஒருவர் மயக்கத்தில் இருந்த அந்த பெண் அணிந்திருந்த சுமார் 3 பவுன் தங்க சங்கலியை ஒருவர் அபகரித்து கொண்டார். இது நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண் மருத்துவ நிர்வகத்திடம் முறையிட்டது. இதுகுறித்து விசாரணையும், நடைபெற்றது.
விசாரணையில் மருத்துவ பணியாளர்கள் யார் என்பது குறித்தும் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணிபுரிந்த 20 பேரையும் வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்த உடன் பணியாளர்கள் கைவரிசை காட்டிய மருத்துவ பணியாளரை காட்டி கொடுத்தனர்.
அந்த நபரிடம் இருந்து சுமார் 3 பவுன் மதிப்புள்ள தங்க சங்கலியை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்தனர். விசாரைணக்கு ஒத்துழைக்க மறுத்த 19 பேர் உள்பட 20 பேரையும் நேற்று வீட்டுக்கு அனுப்பியது. இந்த சம்பவம் அந்த மருத்துவமனையில் நோயாளிகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.