Teenager Mystery death: official, said do not know the political parties aruge

இளம்பெண் மர்ம சாவு : வருவாய் துறை அதிகாரி இறப்பு தெரியாது என கூறியதால் அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்ததால் சற்று நேரம் பரபரப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்டது.

பெரம்பலூர் அருகே குரும்பலூரை சேர்ந்த இளம்பெண் ஐஸ்வர்யா காதல் விவாகாரத்தில் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தியதில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டு ஒருவர் சிறையில் அடைக்கப்பபட்டுள்ளார். இந்நிலையில் இன்று இறந்த பெண்ணிற்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அரசு நிவாரண உதவியாக ரூ. 4லட்சத்து 15 ஆயிரம் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் அரசு சார்பில் வழங்குவதாக தெரிவித்திருந்திருந்தது. அதற்காக காலை பத்து மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்கள் காத்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ்வாடி கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த பிரமுகர்கள் பொதுமக்களுன் வந்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் பயிற்சிக்காக வெளியூர் சென்று விட்டதால் டி.ஆர்.ஓ ப.வேலுவிடம் சென்று முறையிட்டனர். அப்போது அவர் இளம்பெண் இறந்த விவகாரம் இதுவரை தனக்கு தெரியாது என தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கட்சி பிரமுகர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்டனர். டி.ஆர்.ஓ வேலு உடனடியாக வருத்தம் தெரிவித்து கொண்ட பின்னர் இது குறித்து அலுவலர்கள் தெரிவிக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து வரும் புதன்கிழமை தெரிவிப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில் பின்னர் கலைந்து சென்றனர். பகுஜன் சமாஜ் வாடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் காமராசு, விசிக, கரூர், பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் இரா.கிட்டு, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் இளம்பெண் ஐஸ்வர்யாவின் பெற்றோர் வந்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!