The AIADMK MP seen taking money from the milk pot! Mourning new candidates!
பால் குடம் எடுப்பதிலும் பணம் கணக்கு பார்த்த அதிமுக எம்.பி.யால் உள்ளாட்சி வேட்பாளர்கள் வெளியில்பு சொல்ல முடியாமல் புலம்பித் தவிக்கின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அதிமுக கட்சியை சேர்ந்த பல்வேறு அணியினரும் யாகம், அன்னதானம், சிறப்பு பூஜைகள், மண்சோறு சாப்பிடுதல் போன்ற வழிபாடுகளை தாங்களால் முடிந்த அளவு தாங்கள் சொந்த செலவிலேயே பல்வேறு நேர்த்தி கடன்களை செய்து வருகின்றனர்.
இன்று, பெரம்பலூர் ஒன்றிய அதிமுக சார்பில், பால் எடுககும் நிகழச்சி நடைபெற்றது. இதில் 2500க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து பெரும் திராளாக கலந்து கொண்டனர். பெரம்பலூர் துறைமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பால் குட ஊர்வலம் பெரம்பலூர் மதனகோபால சுவாமி திருக்கோவிலை சென்றடைந்து, அங்கு பாலபிசேகம் செய்து வழிபட்டனர். அவர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள குடம், உணவுடன், கைசெலவுக்கு ரூ. 200ம் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டால் குடமும், பணமும் கிடைப்பதாக அறிந்ததால் ஏராளமான பெண்கள் போட்டி போட்டு கலந்து கொண்டனர். நிறைய பெண்களுக்கு குடம் கிடைக்காமல் பாத யாத்திரையாக பால்குடங்களுடன் சென்றனர். மேலும், 2500 லி.க்கும் அதிகமான பாலை கொண்டு மதன கோபால சுவாமி கோவிலில் பாலபிஷேகம் செய்யப்பட்டது.
இதை எல்லாம் பார்க்கும் போது ஏதோ பெரம்பலூர் ஒன்றிய அதிமுக செயலாளரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான மருதைராஜா தான் சொந்த செலவில் இவ்வளவு ஏற்பாடு செய்வதாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், பின்னர்தான் தெரிந்தது பால்குடம் நிகழ்ச்சி நடத்த தற்போது போட்டியிட உள்ள ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களிடமும், பெரும் கடைகள், வணிக நிறுவனங்களிடமும் ஒரு குறிப்பிட்ட தொகை நிர்பந்தித்து வசூலித்ததாக கூறப்படுகிறது.
எம்.பி மருதைராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் சிரமத்தில் இருந்தால் வசூலித்து செய்வதை கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எம்.பி, மருதைராஜா பெரம்பலூர் ஒன்றிய சேர்மனாக இருக்கும் போதே நல்லதொரு நிலையை பொருளாதாரத்தில் அடைந்து விட்டார்.
எம்.பி ஆனவுடன், அவருக்கு உரிய சம்பளம், நிதி ஒதுக்கீடுகளில் கிடைக்கும் கமிசன்கள், வேலைவாய்ப்பு, மற்றும் அரசு ஊழியர்கள் பணிமாற்றம், மற்றும் கேந்திர வித்யாலயாவில் மாணவர்களுக்கு சீட் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தற்போது வருமானத்தை மீறி இலக்குகளை அடைந்து விட்டார் என்ற கட்சியினர்,
இது குறித்து கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகள் சிலர் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிற்கும் வேட்பாளர்கள் உள்ளிட்ட எவரிடமும் வசூலிக்க வேண்டாம், மேலும், அவர்கள் வெற்றி பெற்று வந்தால்தான் வேட்பாளார்கள் நிலை சீரடையும் என்றும், உங்களால் முடிந்த அளவுக்கு சொந்த பணத்தில் செய்யுமாறு தெரிவித்தும் ஒன்றிய செயலாளர் மருதைராஜா கேட்க வில்லை என கூறப்படுகிறது. உளவுத்துறையும் மேலிடத்திற்கு இத்தகவலை தெரியப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிடும் பெரும்பாலான கவுன்சிலர்கள் சாதாரண நிலையில் இருப்பவர்கள்தான், இவர்கள் வெற்றி பெற்றால் என்பதைவிட தோற்றுவிட்டால் வாழ்க்கை நிலைமை வேறு மாதிரி ஆகிவிடும். வருமானமே பார்க்காத எங்களிடம் வசூலிப்பது என்ன நியாயம், மேலும் எங்களின் சுமை அதிமாக்கி உள்ளது என்றும் புலம்புகின்றனர்.
அம்மாவின் உண்மை விசுவாசி என்று விளம்பர படுத்திக் கொள்ளும் ஒன்றிய செயலாளரும், எம்.பி.யுமான மருதைராஜ், தனது சொந்த பணத்தை செலவு செய்யமலேயே பிரமாண்டமாக கூட்டம் கூட்டினார்.
1500 பேரை மட்டும் எதிர்பார்த்த அவர் 2500 பேர் வந்ததால் அதிர்ச்சி அடைந்ததார். மீதமுள்ள ஆயிரம் பேருக்கு குடமும், ரூ.200 எங்கே கொடுப்பது என கட்சியினரிடம் கடிந்து கொண்டார். குடம் கிடைக்காத பெண்கள் அழைத்து வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு குடத்திற்காக ரூ. 200ம், கைசெலவுக்கு ரூ. 200 ம் என ரூ.400 என தேர்தல் நேரம் என்பதால் கொடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒன்றிய செயலாளரும், எம்.பி.யுமான மருதைராஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு இது குறித்து அவருடைய தரப்பில் கருத்து கேட்டபொழுது, அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது, ஊரில் பேசிக் கொள்வதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என தெரிவித்தார்.