the Board on the selection announcement to check the employment office record

online மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட Therapeutic Assistant பணிக்காலியிடங்களுக்கான பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை சரிபார்த்து கொள்ள அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ச.தியாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட Therapeutic Assistant ஆண் -பெண் பணிக்காலியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக எடுக்கப்பட்ட உத்தேச பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு மேல்நிலை கல்வித் தேர்ச்சியுடன் மருத்துவக்கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட 2 ½ ஆண்டு Diploma in Nursing Therapy (Conducted by Directerate of Indian Medicine and Homeopathy, Chennai) பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.

மேற்கண்ட பணிக்காலியிடத்திற்கு வயது வரம்பு 01.07.2016 அன்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அ) பழங்குடியினர் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.

பகிரங்க போட்டியாளருக்கு (OC) உச்ச வயது வரம்பு 30 ஆகும். மேற்காணும் கல்வித்தகுதிகளுக்கு உட்பட்ட பதிவுதாரர்கள் உத்தேசபட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதை 07.11.2016க்குள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு கல்விச்சான்று மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!