நாமக்கல் : கொல்லிமலையில் 338.79 கோடி ரூபாய் புதிய நீர் மின் திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பேட்டி அளித்தார் அப்போது இந்த புதிய நீர் மின் திட்டம் 2021- க்குள் நிறைவடையும்.
.

முதல்வர் விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்தவர் என்பதால் மற்ற மாநலங்களை காட்டிலும் அதிக நஷ்ட ஈடு வழங்க விவசாயிகளிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதில் பல விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுள்ளார்.
போராட்டம் நடத்துவது சில அரசியல் கட்சியினரின் தூண்டுதலின் பேரில் நடைபெறுகிறது.
உயர் மின் கோபுரம் அமைப்பது தொடர்பாக கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்கட்சியினராக இருக்கும் போது எதிர்த்தார்கள்.தற்போது ஆளும் கட்சியாக இருக்கின்றனர் அங்கு உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு சென்று கட்சியினர் பார்க்க வேண்டும்.
கேரளாவில் ஒரு கொள்கை தமிழ்நாட்டில் ஒரு கொள்கை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
மின்பாதை வந்தால் தான் தடையில்லாமல் மின்சாரம் வழங்க முடியும்.
விவசாயிகளின் அரசாக இந்த அரசு இருப்பதால் திறந்த மனதுடன் இருப்பதால் பேச்சுவார்த்தை வார்த்தைக்கு வர வேண்டுமென கோரிக்கை வைக்கின்றேன்.
என்னிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினேன் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்…
ஒருவாரம் நேரம் கேட்டார்கள் ஆனால் போராட்டத்தை தொடங்கி விட்டார்கள்.
அமமுக கழக நிர்வாகி டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் ரகசிய சந்திப்பு நடைபெறவில்லை 100 200 சதவிகிதம் ரகசிய சந்திப்பு நடைபெறவில்லை