The relatives of the victims demanding compensation for the wage worker who fell into the well near Namakkal

நாமக்கல் அருகே கிணற்றில் விழுந்து இறந்த கூலி தொழிலாளிக்கு இழப்பீடு கேட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் உன்னியூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (47).கூலித்தொழிலாளி . இவர் மோகனூர் அடுத்துள்ள ஒருவந்தூர் ஊராட்சி வடுகப்பட்டியில் விவசாய கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2ம் தேதி காலையில் கிணற்றை சுற்றி பார்த்தபோது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இறந்த ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு கிணற்றின் உரிமையாளர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சமரசம் செய்தனர். அப்போது அவர்கள் அதிக தொகை நஷ்ட ஈடாக கேட்பதால் கிணற்று உரிமையாளர் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். அதையடுத்து கோர்ட் மூலம் நஷ்டஈடு பெற்றுக் கொள்வதாக கூறி மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், நாமக்கல்–மோகனூர் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!