unidentified van hits the road Ayyappa devotee near in Perambalur
தெலுங்கான மாநிலம் வாராங்கல்லை சேர்ந்தவர் கிருஷணய்யா (45), இவர் சென்னை வேப்பேரி பகுதியில் தங்கி வாட்சுமேனாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்றிரவு தனது நண்பர்களுடன் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து கொண்டு வேனில் சென்னையில் சபரி மலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் சாலை பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தி உள்ளனர்.

இயற்கை உபாதை கழிப்பதற்காக கிருஷ்ணய்யா சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாப உயிரிழந்தார்.

உடன் வந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!