Veppantattai the police, health center, set the resolution at a meeting of the BJP, Union veterans
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு அமைக்க வேண்டும் என பா.ஜ.க ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேப்பந்தட்டை ஒன்றிய பாரதீய ஜனதா கட்சியின் செயல்வீரார்கள் கூட்டம் வி.களத்தூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் அழகுவேல் தலைமையில் நடந்தது.முன்னதாக வேப்பந்தட்டை ஒன்றிய பொது செயலாளா; சின்னசாமி வரவேற்று பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன், மாவட்ட பொது செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், செயலாளர்கள் அடைக்கலராஜ், குருராஜேஷ், ராஜாராம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கருப்பு பண ஒழிப்புக்காக எடுத்துள்ள நடவடிக்கைகளை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்து கூறுவது,
தாலுகா தலைமையிடமான வேப்பந்தட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காவல் நிலையம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பா.ஜ.க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.