நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி மையங்களில் பயன்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உண்டான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்தும்,
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உண்டான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்தும் பலத்த பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இன்று (15.5.2016) அனுப்பி வைக்கப்பட்டன.
பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதிக்கு 322 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டிலும், 48 இயந்திரங்கள் கூடுதலாகவும் தயார் நிலையில் உள்ளது. குன்னம் சட்டமன்றத்தொகுதிக்கு 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டிலும், 47 இயந்திரங்கள் கூடுதலாகவும் தயார் நிலையில் உள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடத்த தேவையான பொருட்களையும், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அனுப்பி வைக்கும் பணியை பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பேபி நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சிவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.