வாக்காளர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் : ஆட்சியர் நந்தகுமார் தகவல்.
நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கும் வகையிலான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான க.நந்தகுமார் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது:
நாளை நடைபெறவுள்ள சட்ட மன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 147.பெரம்பலூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் 13 வேட்பாளர்களும், 148.குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 14 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
பெரம்பலூர்(தனி) சட்ட மன்றத் தொகுதியில் 1,36,003 ஆண் வாக்களர்களும், 1,42,327 பெண் வாக்காளர்களும், 14 இதரர் என மொத்தம் 2,78,389 வாக்காளர்கள் உள்ளனர்.
இதேபோல் குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 1,27,061ஆண் வாக்களர்களும், 1,28,654 பெண் வாக்காளர்களும், 11 இதரர் என மொத்தம் 2,55,726 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்தம் பெரம்பலூர் மாவட்டத்தில் 2,63,064 ஆண் வாக்களர்களும், 2,71,026 பெண் வாக்காளர்களும், 25 இதரர் என மொத்தம் 5,34,115 வாக்காளர்கள் உள்ளனர்.
பெரம்பலூர; சட்ட மன்றத் தொகுதியில் 30 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட 36 வாக்குச் சாவடிகளும் பதற்றம் நிறைந்தவைகளாக கண்டறியப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 106 வாக்குச் சாவடிகளிலும் (இதில் 17 பதற்றமான வாக்குச்சாவடி), குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 35 வாக்குச் சாவடிகளிலும் (இதில் 16 வாக்குச்சாவடி) வெப்கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் 93 சக்கர நாற்காலிகள் 296 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படும் வகையில் தன்னார்வலர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 180 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 116 வாக்குச்சாவடிகளும் அடங்கும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 3,077 பேர் வாக்குச்சாவடி அலுவலர்களாகவும், 63 பேர் மண்டல அலுவலர்களாகவும், 182 பேர் இதர அலுவலர்களாகவும் ஆகமொத்தம் மொத்தம் 3,322 அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.
மேலும் தேர;தலை அமைதியாகவும், நேர;மையாகவும் நடத்திட 170 துணை ராணுவத்தினர;, 506 காவலர;கள், 52 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர;, 185 பயிற்சி காவலர;கள், 14 பயிற்சி துணை ஆய்வாளர;கள், 40 முன்னாள் படைவீரர;கள், 175 ஊர;க்காவல் படையினர;, 6 தீயணைப்புத்துறையினர;, 95 என்.எஸ்.எஸ் அமைப்பினர; என மொத்தம் 1,243 நபர;கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர;.
பெரம்பலுhர; (தனி) சட்டமன்றத் தொகுதியில் உடும்பியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலுhர; புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிறுவாச்சூர; அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களிலும், குன்னம் சட்டமன்றத் தொகுதியில் மருவத்துhர; ஊராட்சி தொடக்கப்பள்ளி, மேலமாத்துhர; ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கட்டியான்குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரம்பலுhர; (தனி) சட்டமன்றத் தொகுதியில் பெரம்பலுhர; அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னம் சட்டமன்றத் தொகுதியில் குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் மகளிர; வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லுhரி வளாகத்தில் உள்ள தரைதளத்தில் 147.பெரம்பலுhர; (தனி) சட்டமன்றத்தொகுதியிலும், முதல்தளத்தில் – 148.குன்னம் சட்டமன்றத்தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரம்பலுhர; சட்டமன்றத்தொகுதிக்கு 322 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டிலும், 48 இயந்திரங்கள் கூடுதலாகவும் தயார; நிலையில் உள்ளது. குன்னம் சட்டமன்றத்தொகுதிக்கு 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டிலும், 47 இயந்திரங்கள் கூடுதலாகவும் தயார; நிலையில் உள்ளது.
இதுவரை ரூ.70,55,592 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உரிய அனுமதி இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர;;ப்பிக்கப்பட்டதால் ரூ.62,97,395 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் உரியவர;களிடம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 184.37 லிட்டர; அளவுள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை தேர;தல் விதிமுறை மீறல்கள் தொடர;பாக அ.இ.அ.தி.மு.கவினர; மீது 179 வழக்குகளும், தி.மு.கவினர; மீது 93 வழக்குகளும், தே.மு.தி.க.வினர் மீது 23 வழக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியினர; மீது 10 வழக்குகளும், பாரதீய ஜனதா மற்றும் ஐ.Nஐ.கே. கட்சியினர; மீது 7 வழக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர; மீது 9 வழக்குகளும், இதர கட்சிகளின் மீது 18 வழக்குகளும் என மொத்தம் 339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர;கள் வெயிலின் தாக்கம் இல்லாமல் நிழலில் இருந்து வாக்களிக்க ஏதுவாக சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணிவரை நடைபெறும். இதில் 6 மணிக்கு எத்தனை வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் உள்ளார்களோ அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அதனடிப்படையில் வாக்குப்பதிவும் நடைபெறும்.
அனைத்து வாக்காளர்களும் அச்மின்றியும், சுதந்திரமாகவும் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.