பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது;
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அருகே உள்ள வைத்தியநாதபுரம் ஊராட்சி சார்பில், அதே ஊரில் உள்ள தெற்கு தெருவில் தற்போது மக்கும், மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனர். அதில் கண்ணாடி துண்டுகள், பிளாஸ்டிக் குப்பைகள், பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்கள், காய்கறி உள்ளிட்ட பல்வேறு துர்நாற்றம் வீசக்கூடிய பொருட்களை அங்கு பிரித்து அடுக்கி வைத்து வருகின்றனர்.
அதனால் , சிறுவர்கள் விளையாட முடியாமலும், பொதுமக்கள் வசிக்க முடியாத அளவிற்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருவதாகவும், அதனால், அரசு அதிகாரிகளுக்க பல முறை தெரிவித்தும் அதனை வேறு பகுதிக்கு மாற்றாமல் இருந்து வருகின்றனர். எனவே, மற்ற ஊராட்சிகளை போன்று குப்பைகளை போன்று 2 கி.மீ தூரத்திற்கு அப்பால் கொண்டு சென்று சேகரிக்க நடவடிக்கை எடுத்து , தங்களது சுகாதாரம் வாழ்வாதாரத்தை காப்பாற்றி தர வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.