பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதியில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 389 வாக்குகளில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 005 வாக்குகள் இன்று மழையிலும் பதிவானது. இது 79.4 சதவீதமாகும்.
1 லட்சத்து 36 ஆயிரத்து 003 ஆண் வாக்காளர்களில், 1 லட்சத்து 3 ஆயிரத்து 533 போ பேர்கள் மட்டுமே வாக்களித்தனர். இது 76.13 சதவீதமாகும்,
இதே போன்று 1 லட்சத்து 42 ஆயிரத்து 372 பெண் வாக்களர்களில் 1 லட்த்து 17 ஆயிரத்து 002 பேர் வாக்களித்தனர். இது 82.51 சதவீதம் ஆகும். பெண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்களித்து முதலிடத்தில் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் 14 வாக்காளர்களில் 2 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
இதே போன்று குன்னம் தொகுதியிலும் பெண்களே முதலிடத்தில் உள்ளனர்.
குன்னம் சட்ட மன்றத் தொகுதியில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 726 வாக்களர்கள் உள்ளனர். 2 லட்சத்து 3 ஆயிரத்து 777 வாக்குகள் இன்று மழையிலும் பதிவானது. இது 79.69 சதவீதமாகும்.
1 லட்சத்து 26 ஆயிரத்து 061 ஆண் வாக்காளர்களில், 93 ஆயிரத்து 626 பேர்கள் மட்டுமே வாக்களித்தனர். இது 73.69 சதவீதமாகும்,
இதே போன்று 1 லட்சத்து 28 ஆயிரத்து 654 பெண் வாக்களர்களில் 1 லட்த்து 10 ஆயிரத்து 143 பேர் வாக்களித்தனர். இது 85.51 சதவீதம் ஆகும். பெண் வாக்காளர்களே அதிக அளவில் வாக்களித்து முதலிடத்தில் உள்ளனர்.
மூன்றாம் பாலினத்தவர்கள் 11வாக்காளர்களில் 8 பேர் வாக்களித்தனர்.
பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி வாக்குப்பதிவு 79.40 சதவீதமும், குன்னம் சட்ட மன்ற தொகுதி 79.69 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தின் சராசரி வாக்குப்பதிவு 79.54 சதவீதமாகும்.இரண்டு தொகுதியிலும் பெண்களே அதிக அளவில் வாக்களித்து முதலிடத்தில் உள்ளனர்.