பெரம்பலூர்: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்ததுறையின் மூலம் நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான இரண்டு நாள் நடந்த பயிற்சி வகுப்பில் பங்குகொண்ட அரசு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 30 க்கும் மேற்ப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வழக்கு, தகவல் பெறும் உரிமைச்சட்டம், அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய அலுவலக நடைமுறைகள், அரசு ஆணைகள் தொடர்பாக அலுவலர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை குறித்தும் இப்பயிற்சி வகுப்பில் அரசு அலுவலர்களுக்கு முறையாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்ததுறை ஊழியர்கள் மூலம் அரசு அலுவலர்களுக்கு சிறிய தேர்வு நடத்தப்பட்டு, அவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்ததுறை துணை செயலாளர் சுந்தர்ராஜன், பிரிவு அலுவலர் கலியமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.