பெரம்பலூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக முதற்கட்ட வாக்கு சேகரிப்பு பணியை இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் அதிமுகவினர் துவக்கினர்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பெரும் திராளாக கலந்து கொண்டு இன்று காலை வாக்கு சேகரித்தனர். அப்போது முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் சாதனை விளக்க கையேட்டை வீடுவீடாக வினியோகம் செய்தனர். மேலும் தொடர்ந்து அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து இதே போன்று மாவட்டத்தில் உள்ள மற்ற 633 வாக்கு சாவடிகள் அமைந்த கிராமங்களில் வாக்கு சேகரிப்பு பணி செய்யப்பட உள்ளது.
பெரம்பலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. தமிழ் செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் துணை சபாநாயகா வரகூர் அருணாசலம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணசாமி (வேப்பூர்), கர்ணன் (ஆலத்தூர்) சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை), சுரேஷ் (செந்துறை ) மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சகுந்தலா கோவிந்தன். ஒன்றிய குழுத் தலைவர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் ஜெயலட்சுமி ,வெண்ணிலா, கூட்டத்தில் பெரம்பலூர் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன், மாவட்ட பேரவை நிர்வாகிகள் ராம்குமார், கருணாநிதி குணசீலன், சித்தளி கணேசன், ஏ.கே.ராஜேந்திரன் , கீழக்கரை பன்னீர் செல்வம், மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.