Perambalur: DMK Candidate Jayalakshmi Concludes Campaign with a Bike Rally!

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயலட்சுமி மதசார்பற்ற கூட்டணி கட்சியினருடன் பைக் பிரச்சாரம் செய்து இன்று சட்ட மன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முடித்தார். மாவட்ட திமுக அலுவகத்தில் புறப்பட்ட பேரணி பாலக்கரை கடைவீதி வழியாக பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது. அப்போது அவர் பேசியதாவது:
எனக்கு ஆதரவு தாருங்கள், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு உங்களின் பொற்பாதம் பணிந்து கேட்டுக்கொள்கிறேன். நான் என்றென்றும் உங்களுக்கு நன்றியுள்ளவளாக, உங்களுக்கான திட்டங்களையும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று இந்நேரத்தில் உங்களிடம் உறுதி கூறிக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி. திராவிட மாடல் 2.0 ஆட்சி மலர்ந்திட, நம் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக அரியணை ஏறிட, நம் மண்ணின் மைந்தர் அண்ணன் ஆ. ராசா அவர்கள் அவர்களின் புகழ் ஓங்கிட வாக்களிப்பீர் உதயசூரியன்… உதயசூரியன்… உதயசூரியன்…” என பேசினார்.

முன்னதாக, தலைமை கழக பேச்சாளர் க. நாகநந்தினி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஆ.கலியபெருமாள், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அட்சயகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் ஜெயசீலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் எம்.இராஜ்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன்உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!