Two Flyovers to Connect Highways and Alleviate Traffic Congestion in Perambalur; DMK Candidate Jayalakshmi Campaigns While Out for a Walk!

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயலட்சுமி இன்று காலை வாக்கிங் சென்றுக் கொண்டே, கலெக்டர் ஆபீஸ் ரோடு, பாலக்கரை, ரோவர் ஆர்ச் சாலை, பழைய பேருந்து நிலையம் – புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலையில், வாங்கிங் சென்றவர்களிடம் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார். அப்போது, அவர் வாக்களிடம் தெரிவித்ததாவது: திமுக ஆட்சியின் போது அண்ணன் ஆ.ராசா அவர்களின் முயற்சியால் பெரம்பலூருக்கு தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க காவேரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது,
20-ஆண்டுகளுக்கு முன்பு வேப்பந்தட்டை பகுதியில் திமுக அரசு நிறைவேற்றிய கூட்டு குடிநீர் திட்டத்தால் இன்றுவரை குடிநீர் தட்டுபாடு இல்லாமல் உள்ளது தற்போதை திமுக ஆட்சியில் மீண்டும் பெரம்பலூருக்கு 350 கோடியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட உள்ளது. இத்திட்டத்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பெரம்பலூரில் குடிநீர் பஞ்சமே வராது.
பெரம்பலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் துறையூர் சாலையில் அரசு மருத்துவமனையில் இருந்து துறைமங்கலம் ஏரிக்கு செல்லும் ஏரிப்பகுதியிலேயே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் பாலக்கரையில் இருந்து ஆத்தூர் சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைத்து மக்களின் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என பல பயனுள்ள திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார்.
2026 -ல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால், கலைஞர் மகளிர் உரிமை தொகை இனி மாதம் ரூ.2000/- வழங்கப்படும். மகளிருக்கு ரூ.8000/- மதிப்பிலான இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும். அரசு மருத்துவக் காப்பீட்டு திட்டம் ரூ.10 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோர்ந்த அரசு ஊழியருக்கு புதிய பென்சன் திட்டம் செயல்படுத்தப்படும். நெல் மற்றும் கரும்பு குவிண்டால் & டன் ஒன்றுக்கு கொள்முதல் விலை ரூ.3500/- & ரூ.4500/- ஆக உயர்த்தப்படும். முதியோர், கைம்பெண் மற்றும் 50+ வயதுத் திருமணமாகாத மகளிருக்கு ஓய்யூதியம் ரூ.2,000 ஆக வழங்கப்படும். மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை ரூ.2500 ஆக உயர்வு. கலைஞரின் கனவு இல்லம், பல்வேறு திட்டங்களின்கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத விலையில்லா புதிய நவீன மின்சாரப் பம்பு செட்டுகள் வழங்கப்படும். 35 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும்.
5 ஆண்டுகளில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மாவட்டந்தோறும் குறைந்தபட்சம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி. சுய உதவிக்குழு உறுப்பினராக இருக்கும் பெண்களுக்கு பிணை ஏதுவுமின்றி ரூ.5 இலட்சம் வரை மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வாக்குகளை சேகரித்தார்.










kaalaimalar2@gmail.com |
9003770497