Kunnam: Election Pledges Include Sewing Machines for 100,000 People, Vocational Skills Training for 100,000 Women, and Free Education with Competitive Exam Coaching for 100 Individuals — IJK Founder Parivendhar Interview.
இந்திய ஜனநாயக கட்சி (IJK)தலைவர் பாரிவேந்தர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு என் அன்பான வணக்கம், வாழ்த்துகள்.
இந்திய ஜனநாயக கட்சி (IJK), தேசிய கட்சியோடு (NDA) இணைந்து போட்டியிடுகிறது என்பதை அறிவித்திருக்கிறோம். குறிப்பாக, எடப்பாடியார் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழ்நாட்டில் வழிநடத்துகிறார். அவருடைய தலைமையில் இந்திய ஜனநாயக கட்சி இணைந்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதற்கான பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய வேட்பாளர் சரண்யா அன்பழகன் போட்டியிடுகிறார்.
இப்போ, எங்கள் தேர்தல் பிரச்சாரத்துல, எங்கள் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வோம் என்பது பற்றி பல மேடைகளில் சொல்லியிருக்கிறேன். மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்கள் பல தேர்தல் வாக்குறுதிகளைச் சொல்லியிருக்கிறார், அது உங்களுக்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல், இந்திய ஜனநாயக கட்சி அதோடு சேர்ந்து சில புதிய அறிவிப்புகளை, தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. அதற்காகத்தான் இந்தக் கூட்டம்.
100 இலவச இடங்கள் (SRM பல்கலைக்கழகம்): குன்னம் தொகுதியில் யார் மேல் படிப்பு படிக்க ஆர்வப்படுகிறார்களோ, அவர்களுக்கு SRM பல்கலைக்கழகத்தின் மூலமாக 100 இடங்கள் (Seats) இலவசமாக வழங்கப்படும்.
இது B.Com, B.Sc, Computer Science அல்லது B.Tech என எந்தப் படிப்பாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
IAS, IPS, IRS பயிற்சி: குறிப்பாக, அந்த 100 இடங்களில் யார் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் (B.Sc Agriculture) படிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர்களுக்குப் படிக்கும்போதே IAS, IPS, IRS, IFS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் இந்தத் தொகுதி மாணவர்கள் கலெக்டராகவும், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும் உருவாக வழிவகை செய்கிறோம்.
மகளிர் சுயதொழில் மற்றும் தையல் இயந்திரம்:
1 லட்சம் பெண்களுக்கு சுயதொழில் தொடங்கத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்படும். இது திருச்சி, சென்னை அல்லது அந்தந்தப் பகுதிகளிலேயே இதற்கான வசதிகள் செய்யப்படும்.
1 லட்சம் தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்படும்.
என்னைப் பொறுத்தவரை என் பின்னணி உங்களுக்குத் தெரியும். நான் எதைச் சொன்னேனோ அதைச் செய்து காட்டியிருக்கிறேன். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் நான் வேட்பாளராக இருந்தபோது, ஆண்டுக்கு 300 மாணவர்கள் வீதம், 5 ஆண்டுகளில் 1,500 மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை வழங்கினேன். அவர்கள் இன்று படித்து முடித்து வேலையில் இருக்கிறார்கள்.
SRM-ல் படிக்க வேண்டுமென்றால் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நான்கு ஆண்டுகள் படிக்க 60 லட்சம். 100 மாணவர்களுக்குக் கணக்கிட்டால் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான கல்வியை இந்தத் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.
கல்வி என்பது “அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஆலயம் பதினாயிரம் கட்டி கும்பாபிஷேகம் செய்வதை விட, ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியம்” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப நாங்கள் செயல்படுகிறோம்.
மக்கள் வெறும் 500, 1000 ரூபாய்க்காக வாக்களிக்காமல், எதிர்காலத் தலைமுறையின் கல்வியை யோசித்து வாக்களிக்க வேண்டும். அக்ரி (Agriculture) படிப்பைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவது எளிது என்பதால் இந்தப் படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறோம்.
இந்தத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி, வணக்கம். என தெரிவித்தார்.
வேட்பாளர் சரண்யா, முன்னாள் துணை சபாநாயகர் அருணாசலம், அதிமுகவை தலைவர் குன்னம் குணசீலன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை அமைப்பாளர் சித்தளி நாகராஜன், VGM @ வெங்கடாசலம், ஐஜேகே மாநில பொதுச் செயலாளர் சண்முகம், ஐஜேகே மாவட்ட தலைவர் அன்பழகன், அதிமுக வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ கே ராஜேந்திரன், பெரம்பலூர் ஐஜேகே நகர செயலாளர் ஆர் சி ராமலிங்கம் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.