Perambalur: AIADMK candidate Ilambai R. Tamilselvan concludes his campaign with a bike rally!

பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் இன்று மாலை புதிய பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பைக் பேரணியாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் வழியாக காமராஜர் சந்திப்பிற்கு வந்தடைந்தனர். பின்னர். அங்கு வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் பேசியதாவது:
அன்பிற்குரிய பெரம்பலூர் நகர வாக்காளப் பெருங்குடி மக்களே, வர்த்தகப் பிரமுகர்களே, தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய போர்ப்படைத் தளபதிகளே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல்மிகு படைத்தளபதிகளே, பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, தமிழ்நாடு நாயுடு கூட்டமைப்பு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழக வேளாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியினுடைய….
பெரம்பலூர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளராக, உங்கள் வீட்டுப் பிள்ளையாக இந்தத் தொகுதியினுடைய வளர்ச்சிக்குப் போட்டியிடக்கூடிய எனக்கு இரட்டை இலைச் சின்னத்திலே முத்திரையிட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
“உங்கள் வீட்டு பிள்ளையாக, காட்சிக்கினிய எளியவனாக, 10 ஆண்டு காலம் இந்த தொகுதியினுடைய வளர்ச்சிக்கு எந்த நேரத்தில் நீங்கள் அழைத்தாலும் ஓடோடி வந்து உங்கள் குறைகளைத் தீர்ப்பவனாக இருந்தேன். இன்று தேர்தல் வருகிறது என்பதற்காக சிலர் வேடமிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வென்றால் உடனடியாக நீங்கள் பார்க்க முடியுமா? ஏசி அறையிலே உட்கார்ந்து கொண்டு, மேலே மாடியிலே உட்கார்ந்து கொண்டு, எசனையில் இருந்து வந்திருக்கிறாரா? இருக்கச் சொல், அரை மணி நேரம் கழித்து பார்க்கிறேன் என்று சொல்லுபவர்கள் மத்தியில், நீங்கள் சொன்ன 5 நிமிடத்தில் ஓடோடி வந்து உங்களைப் பார்க்கிற உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு இரட்டை இலைச் சின்னத்திலே முத்திரையிட்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
10 ஆண்டு காலத்திற்கு முன்னாள் இந்த நகராட்சி பகுதி எப்படி இருந்தது? இதோ எங்கே வடக்கு வாசல் நம்முடைய ஆத்தூர் சாலையிலிருந்து நம்முடைய சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலை வரை இருக்கிற இந்தச் சாலை ஒரு வழிச்சாலையாக இருந்தது. இருவழிச்சாலையாக்கி, சென்டர் மீடியன் அமைத்து, உயர் கோபுரம் அமைத்து, இந்த நகரம் வளர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவன் உங்கள் வீட்டுப் பிள்ளை தமிழ்செல்வன் என்பதை இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசு கலைக்கல்லூரி வேப்பந்தட்டையிலே, குரும்பலூரிலே இருக்கிற பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி அரசு கலைக்கல்லூரியாக நம்முடைய மாரடியிலே அரசு தொழிற்பயிற்சி நிலையம் என்று இப்படி உயர் கல்விக்கு உங்கள் வீட்டுப் பிள்ளையாக அனைத்து வசதிகளும் செய்து தந்தவன் அண்ணா திமுகவின் தொண்டன் தமிழ்செல்வன் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாநில முதலமைச்சரின் போனையே கீழே போட்டுக்கொண்டு இன்றைக்கு அதிகாரப் பசியிலே 10 ஆண்டு காலம் இருப்பவர்கள் பெரம்பலூரை எட்டியும் பார்க்கவில்லை.
அண்ணா திமுகவின் தொண்டனாக இந்த மக்களுக்காக 10 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் பெரம்பலூர் அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரிக்கு இணையான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, ஒரே நேரத்தில் 250 பேர் உள் நோயாளியாகத் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்தவன் உங்கள் வீட்டுப் பிள்ளை தமிழ்செல்வன் என்பதை எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதி, சிடி ஸ்கேன் வசதி என்று இந்தத் தொகுதி மக்கள் சுகாதார வசதி பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தவன்.
இப்படி பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்தத் தொகுதிக்குக் கொண்டு வந்திருக்கிற உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு இரட்டை இலைச் சின்னத்திலே முத்திரையிட்டு ஏப்ரல் 23-ஆம் தேதி மூன்றாவது பொத்தானாக இரட்டை இலை, இரட்டை இலை, இரட்டை இலைச் சின்னத்திலே முத்திரையிட்டு விடுபட்டிருக்கிற பெரம்பலூரிலே அரசு மருத்துவக் கல்லூரி எடப்பாடியார் முதலமைச்சரானவுடன் உங்கள் வீட்டுப் பிள்ளை தமிழ்செல்வன் கொண்டு வருவேன், கொண்டு வருவேன் என வாக்களித்து ஏப்ரல் 23 உங்கள் சின்னம், நம்ம சின்னம், வெற்றியின் சின்னம் வாக்களிப்பீர், வெற்றி பெறச் செய்வீர் உங்கள் வீட்டுப் பிள்ளையாக நன்றியோடு உழைப்பேன். எனக்கு வாக்களியுங்கள் இரட்டை இலைச் சின்னத்தில் என்று சொல்லி நன்றியோடு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.” என பேசினார்.

முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் மோகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பூவை.த. செழியன், பாரதிய ஜனதாவின் மாவட்ட தலைவர் முத்தமிழ்ச்செல்வன், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் கார்த்திகேயன், தமிழ் மாநில காங்கிரஸ் சித்தார்த்தன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், அன்பிற்கினிய இந்திய ஜனநாயகக் கட்சியினுடைய தலைவர் அழகுவேல் அவர்களே, வருகை தந்திருக்கின்ற தமிழக நாயுடு கூட்டமைப்பின் தலைவர் ரங்கராஜ் நாயுடு, தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பினுடைய தலைவர் தேவேந்திர பாலாஜி உள்ளிட்ட அனைத்து கூட்டமைப்பினுடைய தலைவர்கள், அதிமுகவை சேர்ந்த வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டி.என். சிவப்பிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், பெரம்பலூர் நகரச் செயலாளர் ராஜபூபதி, பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார், பேரூர் செயலாளர்கள் குரும்பலூர் செந்தில்குமார், அரும்பாவூர் விவேகானந்தன், பூலாம்பாடி ஆறுமுகம் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொறுப்பாளர் என திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு நாயுடு நாயுடு கூட்டமைப்பின் தலைவர் ரங்கராஜ் நாயுடு வேட்பாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வனுக்கு வீரவாள் பரிசாக வழங்கினார்.











kaalaimalar2@gmail.com |
9003770497