சட்டீஸ்கர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார்.பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, பிரதமர் மோடி சட்டீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடிக்கு மாநில அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அம்மாநில தலைநகர் ரெய்ப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!