Perambalur: World Malaria Day; Awareness Meeting for Garment Workers!

இன்று உலக மலேரியா தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், பாடாலூரில் இயங்கி வரும் பைன் பிட் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மலேரியா நோய் பரவும் விதம் மற்றும் தடுக்கும் முறை சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தல் போன்றவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் இளநிலை பூச்சியியல் வல்லுநர் ராமர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார ஆய்வாளர் திருமுருகன், அஜய் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். விழிப்புணர்வு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பைன் பிட் கார்மன்ட்ஸ் மேலாளர் வேல்முருகன் நிர்வாகத்தின் சார்பில் செய்திருந்தார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!