Perambalur: Missing girl’s body recovered from well; Police investigation!!

பெரம்பலூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி சுபாஷினி (17). இவர் 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தேர்வு முடிவுக்கான காந்திருந்த நிலையில் தீடீரென காணமல் போனார். இவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது பெற்றோர்கள் மருவத்தூர் போலீசில் இது தொடர்பாக புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் இன்று மாணவி சுபாஷினி அதே ஊரில் உள்ள முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மிதந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!