ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்டி நிறுவனத்தில் நடைபெறும் சோதனைகள், ராமமோகராவ், விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற சோதனைகள் போல ஆகிவிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அரசியல் சட்டத்திற்கு எதிரானது, தவறானது எனவும் அதனை திமுக எதிர்ப்பதாகவும் கூறிய அவர், மாநில சுயாட்சி மாநாட்டை நடத்துவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.