Rs 2.5 crore being transported to distribute to voters in the Kunnam constituency seized?

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய காரில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் ஆர்.டிஓ அனிதாவிடம் ஒப்படடைத்தனர்.
பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில், கலால் மேற்பார்வை அலுவலர் பழனிச்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுடிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த TN 46 AC 6637 என்ற மாருதி ஸ்விப்ட் காரில் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்த திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் (64), என்பவரும், ராஜேஷ் கிருஷ்ணன்(25), என்பவரும் 4 அட்டை பெட்டிகளில் பதுக்கி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2 கோடியே 44 லட்சத்து 97 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் ஆர்.டி.ஓ அனிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு, வருமான வரித்துறையினர் மூலம் ஜெயராமன் மற்றும் ராஜேஷ் கிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரில் பதுக்கி எடுத்தச் செல்லப்பட்ட பணம் குன்னம் தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்டதாக தெரிய வந்திருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.











kaalaimalar2@gmail.com |
9003770497