கிறிஸ்டி நிறுவனத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கிறிஸ்டி நிறுவனத்தில் வருவமான வரி ஏய்ப்பு தொடர்பாக மட்டுமே ஆய்வு நடைபெற்றதாக கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.