பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அதியமான் மகன் அனீஷ்குமார்(17), சிங்காரவேல் மகன் அஜீத்ராஜ்(17) ஆகிய இருவரும் அவ்வூரிலுள்ள அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
வழக்கம் போல் இன்று காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த தொழுதூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து மாணவர்கள் இருவர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் அனீஸ்குமாரும், அஜீத்ராஜும் படுகாயமடைந்தனர். இதனையறிந்த அப்பகுதி பொது மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்து விபத்துள்ளான பேருத்தை சிறை பிடித்தனர்.
காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
தகவல் அறிந்த மங்களமேடு போலீசார். திட்டக்குடி அருகே உள்ள சாத்தநத்தம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜு மகன் மணிகண்டன் (21) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.