சென்னையில் பேச முடியாத சிறுமியை சீரழித்த 24 பேரையும் ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் அவர்களை விரைந்து தூக்கிலிட வேண்டும் என்றும் ஏகத்துவ அழைப்பாளர் பக்கீர் முகமது அல்தாபி தெரிவித்துள்ளார்.சென்னையில் சமூக ஒற்றுமை சங்கம் சார்பில் மண்ணடியில் உள்ள ஆயிஷா மஹாலில் வெள்ளி ஜூம்மா சிறப்பு தொழுகை நடைபெற்றது.இதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பக்கீர் முகமது அல்தாபி சமூக ஒற்றுமைக்கான சிந்தனைகளை குறித்து விரிவாக பேசினார். அப்போது யாராக இருந்தாலும் நீதிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துவதை குறிப்பிட்ட அல்தாபி அல்லாஹ்வின் முன் அனைவரும் சமமே என தெரிவித்தார்.எல்லாம் தெரிந்தவர் ஒருவர் என எவரும் கூறமுடியாது என குறிப்பிட்ட அல்தாபி எல்லாம் தெரிந்த வல்லவர்களை வீழ்த்த அடுத்து அடுத்து சமூகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சமூகத்தில் பாலியல் வன் செயல் என்னும் கொடுமை நமது உள்ளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது என குறிப்பிட்டார். சென்னையில் 24 பேர் கொடூரமான செயலில் ஈடுபட்டதை ஒரு போதும் மன்னிக்க முடியாது என்றும் அவர்களுக்கு விசாரணை வைத்து நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் விரயமாக்குவதை விட அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி தூக்கிலிடப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும் காவல்துறை நீதித்துறை உள்ளிட்ட அரசு துறைகள் இது போன்ற கொடூரர்களுக்கு தண்டனை பெற்று தருவதில் தாமதம் ஏற்பட்டால் மீண்டும் தவறுகள் நிகழ வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே அதற்கு வழியின்றி தண்டனை உடனடியாக பெற்றுத்தரவேண்டும் என்றும் அல்தாபி வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் சேப்பாக்கம் அப்துல்லா,சமூக ஒற்றுமை சங்கத்தின் பதுருல் ஆலம், வண்ணை சுல்தான், ,சம்சுதீன்,அபு கிதிர் மற்றும் ஒற்றுமை சங்கத்தின் களப்பணியாளர்கள் புதுப்பேட்டை முகமது சாஜித்,செல் சாதிக்,அபுதாகிர்,அஜ்மல்கான்,ரில்மி, அபுகம்சா, அயனாவரம்நூர்,மண்ண்டி மரக்கடை சாகுல்,உள்ளிட்ட 350-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.