சென்னை அடையாறில் குழந்தையை பள்ளியில் இறக்கி விட்டு, பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிந்தவரை மர்ம கும்பல் கொடூரமாக துடிதுடிக்க வெட்டிப் படுகொலை செய்தது.
சென்னை அடையாறு மல்லிப்பூநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடையாறு இந்திரா நகர் பகுதியில் உள்ள பள்ளியில் தனது குழந்தையை இறக்கி விட்டு சுரேஷ் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் ஆறு பேர், சுரேஷின் இருசக்கர வாகனத்தை மடக்கி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். தகவலின் பேரில் அடையாறு மாவட்ட துணை ஆணையர் நேரில் விசாரணை மேற்கொண்டார். சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள வீட்டில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றினர். கொலை செய்யபட்ட சுரேஷ் மீதும் சில குற்ற வழக்குகள் உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த படுபயங்கர கொலைச் சம்பவம் அப்பகுதியினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.