ஜெயலலிதா கைரேகை குறித்து பொய்யான தகவலை மருத்துவர் பாலாஜி அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்த தி.மு.க வேட்பாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக-வின் போஸ் வெற்றிபெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி திமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் கைரேகையை பெற்ற மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலம் பொய்யானது என சுட்டிகாட்டி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 28 ம் தேதி அன்றுதான் தேர்தல் ஆணையத்திடம் இருந்து 2 கடிதங்கள் அனுப்பபட்டதாகவும், அந்த கடிதங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தான் அதிமுக அலுவலகத்திற்கு சென்றடைந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் மருத்துவர் பாலாஜி, தனது வாக்குமூலத்தில் அதற்கு முந்தைய நாளான 27ம் தேதியே ஆணையம் அனுப்பிய கடித்தத்தை ஜெயலலிதாவிடம் படித்து காட்டி கைரேகை பெற்றதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரனையை ஆக்ஸ்ட் 3 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.