ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் டொமினிக் தீம், ஜோகோவிச், வோஸ்னியாக்கி ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். மற்றொரு முன்னணி வீரரான வாவ்ரிங்கா முதல் சுற்றில் தோல்வியடைந்தார். ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம், பெலாரஸ் வீரர் இல்யா இவாச்கா உடன் விளையாடினார். முன்னணி வீரரான டொமினிக் தீம் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடினார். 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் தீம் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறி னார். இதேபோல், போட்டி தரவரிசையில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பிரேசில் வீரர் ரோஜெரியோ டத்ரோ சில்வா உடன் விளையாடினார். காயத்திலிருந்து மீண்டு நிலைக்கு திரும்பிய ஜோகோவிச் இந்த தொடருக்கு சிறந்த முறையில் தயாராகினார். ஆரம்பம் முதலே போட்டியை தன்பக்கம் வைத்திருந்த ஜோகோவிச் நிதானமாக ஆடி புள்ளிகளை எடுத்தார். முடீவ்ல், 6க்கு3, 6க்கு4, 6க்கு4 என்ற நேர் செட்டில் ஜோகோவிச் வெற்றிபெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னாள் சாம்பியனான சுவிஸ் வீரர் வாவ்ரிங்கா, ஸ்பெயின் வீரர் கார்சியா லோபஸ் உடன் 2க்கு3 என்ற செட் கணக்கில் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் ஃப்ரான்சு வீரர் ரிச்சார்டு, இத்தாலி வீரர் ஆண்ட்ரியா செப்பி உடன் முதல் சுற்றில் விளையாடினார். இதில், முதல் செட்டில் செப்பியை திணறடித்த ரிச்சார்டு அவரை ஒரு புள்ளி கூட எடுக்கவிடாமல் 6க்கு0 என தனதாக்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த செட்களிலும் இதேபோல், ஆடிய ரிச்சார்டு 6க்கு2, 6க்கு2 என்ற கணக்கில் கைப்பற்றி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.