தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல்படுத்த படுவதை கண்காணிக்க ஐ.ஏ.எஸ அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, மற்றும் வைத்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.உத்தரவு அமல் படுத்தப்படுவதை கண்காணிக்கவும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அமுதா, சந்தோஷ் பாபு, ராஜேந்திர ரத்னு ஆகியோர், தமிழகத்தின் 6 மண்டலங்களில் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!