பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் வரும் நவ.25ந் தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக 210 கிலோ நெய் 210 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. பெரம்பலூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி விழா மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தினங்களில் மகா தீபம் ஏற்பட்டு வருகிறது.
அதன் படி 33-வது ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 25ந்தேதி நடக்கிறது. இதனை யொட்டி பிரம்ம ரிஷி மலை அடிவாரத்தில் உள்ளகா கன்னை ஈஸ்வரர் கோவிலில் அன்று காலை 6 மணிக்கு கோபூஜை நடக்கிறது. மாலையில் மலை அடிவாரத்தில் ருத்ர ஜெபம் 210 மகா சித்தர்கள் யாகம் அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம் நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு மலை உச்சியில் உள்ள கொங்கணர் தூண் அருகே 210 கிலோ பசு நெய் 210 மீட்டர் திரியுடன் சந்தன எண்ணெய் 50கிலோ பூங்கற்பூரம் மற்றும் கூட்டு எண்ணெய் மகாதீபம் தயார் செய்யப்பட்டு வாண வேடிக்கையுடன் மகா கார்த்திகை தீபஜோதி ஏற்றப்படுகிறது.
மலை அடிவாரத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. 500க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்படுகிறது.
மகாதீப விழாவிற்கான ஏற்பாடுகளை மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் ராஜ்குமார் குருஜி இணை நிறுவனர் ரோகிணிராஜ்குமார் மற்றும் மகாசித்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் குருகடாட்சம் மெய்யன்பர்கள் தலையாட்டி சித்தரின் சீடர்கள் மற்றும் நளபாகம் உரிமையாளர் முத்துவீரன் உள்பட பலர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தீபத்திற்கான எண்ணெய், அன்னதானம், மற்றும் நன்கொடை வழங்க அல்லது தான தர்மம் அளிக்க விரும்புவர்கள் +91 8870994533 என்ற எண்ணிலும் www.mahasiddhargaltrust.org யிலும் தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.