Minister Sivasankar inaugurated the Oxygen Production Center at Perambalur Government Hospital
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், 3 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கலெக்டர் வெங்கடபிரியா மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராமலிங்கபுரம் ஊராட்சியில் மருதையாற்றின் குறுக்கே புஜங்கராயநல்லூரில் இருந்து ரசுலாபுரம் வரை ரூ.6.14 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியையும்,
அருணகிரிமங்கலம் ஊராட்சி, மாக்காய்குளம் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக் கடையையும், திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொதுவிநியோகத்திட்டத்தின் கீழ் திறந்து வைத்து பொருட்களை வழங்கி அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.