பெரம்பலூர். செப்.23- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சோலையம்மாள் ( வயது 63 ). இவர் நேற்று இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் சாலையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த ரெங்கநாதன் மகன் முருகன் (வயது 28) என்பவர் தனது மாட்டு வண்டியில் அருகிலுள்ள ஓடையிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு சிமெண்ட் சாலையின் வழியாக வந்துள்ளார். மாட்டு வண்டியின் ஒரு சக்கரம் தூங்கிக் கொண்டிருந்த சோலையம்மாள் மீது எதிர்பாராதவிதமாக ஏறியது. இதில், சம்பவ இடத்திலேயே சோலையம்மாள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வ.களத்தூர் காவல் நிலையத்தினர் சோலையம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாட்டு வண்டியை ஓட்டி வந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497