
பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே லாரி மோதியதில் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபதாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், நகர் மன்னார்குடியை சேர்ந்தவர் ராமு மகன் கார்மேகவண்ணன் ( வயது 27). இவர் ஆட்களை வைத்து ஒப்பந்த அடிப்படையில் வண்ணம் தீட்டும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கார்மேகவண்ணன் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவர்களில் கருப்பு-வெள்ளை வண்ணம் தீட்டுவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார்.
தற்போது அந்த பணி பெரம்பலூர் அருகே உள்ள வாலிகண்டபுரத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, இன்று காலை வாலிகண்டபுரம் மேம்பாலத்தில் உள்ள சுவர்களில் ஆட்கள் வர்ணம் பூசிக்கொண்டு இருந்தனர். இதனை கார்மேகவண்ணன் மேற்பார்வையிட்டு கொண்டு இருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டையிலிருந்து திருச்சி நோக்கி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக கார்மேகவண்ணன் மீது மோதியுதுடன் அவர் மீது பின்பக்க சக்கரைம் ஏறி நின்றது, இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக்கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருச்சி அருகேயுள்ள நடராஜபுரத்தை சேர்ந்த ரவி (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497