பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிருந்து மக்களை பாதுகாத்திட, முதலமைச்சர் 2012ம் ஆண்டு முதலே நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கிட உத்தரவிட்டார். அதனடிப்படையில் சித்தா மருத்துவத் துறை சார்பில் 9 வகையான மூலிகைகள் கலந்த நிலவேம்பு குடிநீர் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
மழைக்காலத்தில் தொற்று நோய்களை கட்டுப்படுத்திட, பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 9 அரசு சித்த மருத்துவப்பிரிவுகளில் சிறப்பு மையங்கள் மூலம் இன்று முதல் 5 நாட்களுக்கு தொடர்ந்து இத்தகைய நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
நிலவேம்பு கசாயத்தை பருகுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்து, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.
பெரியவர;கள் 30 மி.லி முதல் 50 மி.லி வரையும், 1 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி வரையும் தினசரி 5 நாள்களுக்கு தொடர்ந்து அருந்தி வர காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள முடியும்.
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மருதராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ்அஹமது ஆகியோர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இணைஇயக்குநர் உதயகுமார் பெரம்பலூர் நகராட்சித் தலைவர் இரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயக்குமார், சித்த மருத்துவர் விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.