சென்னையில் நடைபெற்று வரும் மியூர்ல ஓவியர் பிரின்ஸ் தொன்னக்கல் தலைமையில் நடைபெற்று வரும் கண்காட்சியில் சென்னையை சேர்ந்த 8 ஓவியர்களின் படங்களும் இடம் பிடித்துள்ளன. இதில் வயது குறைந்த ஓவியரான உஷாரமேஷ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் நமது செய்தியாளருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் தாம் சிறு வயது முதல் இந்த ஓவிய கலையில் ஆர்வம் கொண்டு அதனை வரைந்து வருவதாகவும் ஓவியர் பிரின்ஸ் தம்மை இனம் கண்டு தமக்கு வாய்ப்பு அளித்தமைக்காக நன்றி தெரிவித்து கொள்வதகாவும் கூறினார். இந்த மியூரல் ஓவியங்களை வரைவதற்காக பல மாதங்கள் பயிற்சி பெற வேண்டும் என தெரிவித்த ஓவியர் உஷா முதலில் மனித உருவங்களின் அங்கங்கள் அவர்கள் அணியும் ஆபரணங் களைத்தான் ஓவியமாக வரையவேண்டும் என்றும் அடுத்தடுத்து படிப்படியாக பல வடிவங்களை வரைந்த பின்னரே முழுமையான ஓவியங்களை வடிக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறினார். தமது ஓவியங்கள் கேரளாவில் நடைபெற்ற கண்காட்சியில் இடம் பெற்றதாக கூறும் உஷா எதிர்காலங்களில் தாம் மேலும் பல ஓவியங்களை வரைய ஆயத்தமாக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.