லோக்ஆயுக்தாவில் விசாரணைக்கான அதிகாரம் இல்லை என கூறி சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். லோக் ஆயுக்தா மசோதாவை செலக்ட் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும் என்கிற திமுகவின் கோரிகை நிராகரிக்கப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதா செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்படாததால் தி.மு.க வெளிநடப்புதி.மு.கவை தொடர்ந்து காங்கிரசும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மீண்டும் திமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்திக்கது.