பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக வட கொரியா திகழும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்தால், அதிபர் கிம்டனான சந்திப்பு மீண்டும் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அதிபர் கிம்முடனான தமது சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ய அமெரிக்க குழுவினர் வட கொரியாவை சென்றடைந்ததாகவும், பொருளாதாரம் மற்றும் நிதியியலில் மிகச்சிறந்த வளர்ச்சி கண்ட நாடாக வருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் வட கொரியாவிடம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஏதோ ஒரு நாளில் வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சி உலகிற்கு தெரிய வரும் என்றும், தமது இந்த கருத்தை அதிபர் கிம் ஏற்றுக் கொள்வதாகவும், இது நடந்தேறுவது உறுதி எனவும் டிரம்ப் அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.