ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தலைமை அறிவித்துள்ளது.வெகு நாட்களாக ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி ஆன்மிக அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமடைந்தது. இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ராஜூ மகாலிங்கத்தின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் திடீரென கட்சியில் இருந்த நீக்கப்படுவ தாக தகவல் வெளியானது. இந்நிலையில், அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.