3-state bus crash that would provide compensation for the two other cases, the plea to confiscation by the courts
பெரம்பலூர் நீதிமன்றங்களில் இரு வேறு வழக்குகளில் இழப்பீட்டு தொகை வழங்காத அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை பெரம்பலூர் நீதிமன்றங்கள் ஜப்தி செய்து உத்தவிரவிட்டதன் பேரில், பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த 3 அரசு போக்குவரத்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரை சேர்ந்த வேலுசாமி மகன் கதிரேசன். (வயது 52), பொறியாளரான இவர், திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி உள்ள மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2013 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி அன்று குளித்தலையில் இருந்து முசிறி நோக்கி, அவருடைய நண்பர் ரவிச்சந்திரனுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்தும், ரவிச்சந்திரன் சென்ற இருசக்கர வாகனமும், நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்து வலது கால் துண்டானது. இதனால் பாதிக்கப்பட்ட கதிரேசன் பெரம்பலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதமன்றம் 2014 ம் ஆண்டு பிப்ரவரி 27 ம் தேதி கூறப்பட்ட தீர்ப்பில் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்ப்பட்டவருக்கு, இழப்பீட்டாக வழங்க ரூ. 14 லட்சத்து 63 ஆயிரத்து 112 வழங்க வேண்டுமென விதித்தது. இதனை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, வழக்கை விசாரித்த நீதி மன்றம், பாதிக்கப்பட்ட கதிரேசனுக்கு ரூ.11 லட்சத்து 63 ஆயிரத்து 112 விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனை அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்ய்ப்பட்டது. அதனை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்ற நீதிபதி நசீமாபானு பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான இரு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்திரவிட்டது. அதன் பேரில், இன்று மாலை, பெரம்பலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த இரு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர்.
இதே போன்று மற்றொரு வழக்கில், பெரம்பலுர் மாவட்டம். வேப்பந்தட்டை நடுத்தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமார், (வயது 47) என்பவர், 2008 ம் ஆண்டு, மே மாதம், 28 தேதி இரு சக்கரை வாகனத்தில், பெரம்பலூர் அருகே உள்ள வடகரை – பாண்டகப்பாடி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அரசு பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் இவரது கைகள் சேதமானது. இதற்கு ரூ.4 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க கோரி 2010 ஆண்டு பெரம்பலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம் கடந்த 2015 ஆம் அக்டோபர் மாதம் 9 ம் தேதி ரூ.2லட்சத்து 30 ஆயிரத்தி 86 வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்திரவிட்டது. வழங்காமல் தாமதப்படுத்தியதால் நிறைவேற்று மனுதாரர் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், வட்டியுடன் சேர்த்து ரூ. 3 லட்சத்து 40 ஆயிரத்து 968 வழங்க உத்திரவிட்டது. ஆனால் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டதால் சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்திரவிட்டதன் பேரில் இன்று பெரம்பலூரில் இருந்து அரியலூருக்கு சென்று கொண்டிருந்த பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
பெரம்பலூர் நீதிமன்றத்தல் ஒரே நாளில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 3 பேருந்துகளை ஜப்தி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.