roever school bus (1)பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் தண்ணீர் பந்தலில் உள்ள தனியார் பள்ளியில் அனுக்கூர், குடிகாடு, வி.ஆர்.எஸ்.எஸ்.புரம் ஆகிய கிராமங்களிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பள்ளி பேருந்தில் தினசரி சென்று படித்து வருகின்றனர்.

இந்நிலையில் அனுக்கூர், குடிகாடு கிராமத்திற்கு வந்து செல்லும் பேருந்து மாணவ,மாணவியர் பயணிக்க தகுதியில்லாத வகையில் காணப்படுவதாக பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் ஏற்கனவே பல முறை புகார் தெரிவித்து இருந்தனர்.

மேலும், அதில் பயணித்த மாணவனுக்கு ஒரு துண்டாகி உள்ளது.

மீண்டும் அதே பேருந்து இயக்கப்பட்டதால் இன்று காலை குடிகாடு கிராமத்தில் பெற்றோர்கள் அந்தப் பேருந்தை சிறைப்பிடித்தனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உடனடியாக மாற்று பேருந்து விடப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது. இதில் தகவல் அறிந்த வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மாணவர்கள் பயணிக்க தகுதியற்ற அந்த பேருந்தின் எப்சி மற்றும், பர்மிட்டை ரத்து பேருந்தை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சில நாட்களுக்கு முன்னர்தான் பெரம்பலூர் நகரில் பேருந்து கவிழ்ந்து 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், உடனடியாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன் தலைமையிலான குழுவினர் மீண்டும் அனைத்து பள்ளிப் பேருந்துகளையும் பரிசோதித்து வருகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!