col i day

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் டாக்டர். தரேஸ் அஹமது, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், தேசிய ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் மூன்று வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவா;களின் வாரிசுகள் 25 நபர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தற்காக 22 பேருக்கு சான்றிதழ்களையும், சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் 200 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

இந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் 12 ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த முன்னாள் படைவீரர் பிள்ளைகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் இரண்டு நபர்களுக்கு ரூ.8,000ம்,

இயற்கை மரண உதவித்தொகையாக 24 நபர்களுக்கு ரூ.2,75,000ம், திருமண உதவித்தொகையாக 6 நபர்களுக்கு ரூ.48,000ம்,

24 நபர்களுக்கு தலா ரூ.20,000 மதிப்பு வீதம் ரூ.4,80,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், திருமண உதவித்தொகையாக 6 நபர்களுக்கு ரூ.6,000ம், ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்பவர்களுக்கு தீருதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு ரூ.90,000ம்,

சிறுபான்மை நலத்துறையின் மூலம் 5 நபர்களுக்கு ரூ.18,000 மதிப்பிலான தையல் எந்திரங்களையும், 10 நபர்களுக்கு ரூ26,000 மதிப்பிலான விலையில்லா சலவைப்பெட்டிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ11,600 மதிப்பிலான மூன்று சக்கர வண்டிகளையும், 2 நபர்களுக்கு ரூ.7,640 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களையும்,

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளியால் மோட்டார் அமைக்க 5 நபர்களுக்கு அரசு மானியத்துடன் ரூ.16.76 லட்சமும், கூட்டுறவுத்துறையின் மூலம் 3 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 46 நபர்களுக்கு ரூ.10லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்,

தாட்கோ மூலம் 10 நபர்களுக்கு சுயதொழில் துவங்கும் திட்டம் மற்றும் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.44.14 லட்சம் மதிப்பிலும், மாநில அளவில் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.22,500ம்,

5 சுயஉதவிக்குழுக்குளுக்கு ரூ.3,72,500 மதிப்பிலான பால் தரம் பார்க்கும் கருவியும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.16,000 மதிப்பிலான நலத்திட்டங்களையும், கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் கோழிப்பண்ணை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு ரூ.4,50,000 மதிப்பிலும்,

அதிக அளவில் பால் வழங்கிய 6 உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.6,000ம், புதுவாழ்வுத்திட்டத்தின் மூலம் 10 வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு ரூ.12,00,000 மதிப்பிலும், மகளிர் திட்டத்தின் மூலம் திருநங்கை ஒருவர் உள்பட 10 நபர்களுக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளையும் ஆக மொத்தம் 147 பயனாளிகளுக்கு ரூ 1 கோடியே 27 லட்சத்து 88 ஆயிரத்து 108 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

பின்னர், பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு இசைப்பள்ளி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, செஞ்சேரி வித்யாஸ்ரம் உண்டு உறைவிடப்பள்ளி, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி, வேப்பூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மாதிரி மகளிர் கல்லூரி, குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி, சாரதா தேவி கலை அறிவியல் கல்லூரி மற்றும் தனலெட்சுமி சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் பள்ளிகள் அளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடத்தையும், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

கல்லூரிகள் அளவில் குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி முதலிடத்தையும், வேப்பூர்,வேப்பந்தட்டை அரசுக்கல்லூரிகள் இரண்டாமிடத்தையும், ரோவர் கல்லூரி மற்றும் சாரதா கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ மாணவகளிக்கு மாவட்ட ஆட்சியர் கேடயங்கயையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா, மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) (பொறுப்பு) மலர்விழி, மாவட்ட ஊராட்சி தலைவர் சகுந்தலா, நகராட்சித்தலைவர் ரமேஷ், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் ஜெயக்குமார், ரா.வெண்ணிலா, ஜெயலட்சுமி, மாவட்ட முதன்மைகக்கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!