ஆர்.கே நகர் இடைதேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தேனி ஒடைப்பட்டி தலைமை காவலர் ஒருவர் காவல்துறை சீருடையோடு நேரு சிலை அருகே மொட்டை அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஒடைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் வேல்முருகன் இவர் தமிழக முதல்வர் ஜெயலாலிதா ஆர்.கே நகர் இடை தேர்தலில் வெற்றிபெற ஒருமாதகாலமாக விரதம் இருந்து மொட்டை அடித்து கொள்வதாக வேண்டியுள்ளார்.

தற்போது ஜெயலலிதா வெற்றி பெற்றதால் தேனி நேரு சிலை அருகே காவல்துறை சீரூடையுடன் மொட்டை அடித்து கொண்டு வேண்டுதலை நிறைவேற்றினார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Latest Tamil News Live Updates - Kalaimalar.

error: Content is protected !!