பெரம்பலூர்: குன்னம் அருகே விவசாயி கிரயம் செய்த நிலத்திற்கு உரிய நேரத்தில் கிரைய பத்திரம் வழங்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய பத்திரப்பதிவு பெரம்பலூர்

சார் பதிவாளருக்கு ரூ.10ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்க நுகர்வோர்நீதிமன்றம் உத்திரவிட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருணாநிதி (வயது48). இவர் அதே ஊரைச் சேர்ந்த தங்கம்மாள் மற்றும் வாரிசுகளிடம் இருந்து பூர்வீக பாத்திய நிலம் வாங்கியிருந்தார்.

நிலம் கிரயம் செய்ததற்கான சொத்து பெரம்பலூரில் உள்ள பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில் 9.3.2012 அன்று பதிவு செய்யப்பட்டது. இதற்காக பதிவு கட்டணம்

ரூ.5ஆயிரத்து 135-ம் முறையாக செலுத்தபட்டிருந்தது. ஆனால் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்யப்பட்டதற்கான சொத்து கிரைய பத்திரத்தை கருணாநிதிக்கு உடனே வழங்காமல் காலம் கடத்தி உள்ளார்.

பலமுறை சார்பதிவாளர் அலுவலகத்தை அணுகியும், கருணாநிதிக்கு பத்திரம் வழங்கப்படாமல் அவரை அலைக்கழிய விட்டுள்ளார்.

இதில் மனஉளைச்சல் அடைந்த கருணாநிதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் பெரம்பலூர் சார்பதிவாளர், அரியலூர் மாவட்ட

பத்திரப்பதிவுஅதிகாரி மற்றும் தமிழ்நாடு அரசு பதிவுத்துறை தலைவர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குதொடர்ந்தார்.

இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்றத்தலைவர் கலியமூர்த்தி, உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொன்ட குழுவினர் விசாரித்தனர். வழக்கு நிறைவில் பெரம்பலூர் சார்பதிவாளர், கருணாநிதிக்கு உரியநேரத்தில் பத்திரம் வழங்காமல் அவருக்கு, மனஉளைச்சலுக்கு ஆளாக்கியதால் ரூ.10ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவிற்காக ரூ.3ஆயிரமும் வழங்க சார்பதிவாளருக்கு உத்திரவிட்டனர்.

மேலும், கருணாநிதிக்கு உரிய கிரைய பத்திரத்தை 1 மாதத்திற்குள் வழங்கவும், இழப்பீட்டை 2 மாதத்திற்குள் வழங்கவும் சார் பதிவாளருக்கு உத்திரவிட்டனர் .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!