தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்கள் கூட்டுறவு வங்கி செயலாளர்களுக்கான நிதி உள்ளீடு, நிதிசார் கல்வி மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் செல்வராசு தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் ஆகியோர் இப்பயிலரங்கத்தில் கலந்துகொண்டனர்.

நாளை நடைபெறும் பயிலரங்கில் வேப்பூர் மற்றும் ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பயிலரங்கத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் பேசியதாவது:

நடப்பு நிதியாண்டில் நிதி உள்ளாக்கம் நிதிசார் கல்வி மற்றும் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க மாவட்ட அளவில் ரூ.36.00 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி மேலாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் இக்கடன் உதவிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். இதன்மூலமாக கிராம மக்களின் பொருளாதாரம் பெருமளவில் முன்னேற்றமடைந்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய ஒரு வாய்ப்பாக அமையும். எனவே வங்கி மேலாளா;கள் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் ஊராட்சி அள்விலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும், என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து வங்கி மேலாளர்கள், ஊராட்சி அளவிலான குழுக்கூட்டுமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!