பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் : நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தல்:

பெரம்பலூர் பெரம்பலூரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரவாணிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் தரப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரம்பலூர் புறநகர் நான்கு ரோடு சந்திப்பில் இருந்து புறநகர் பேருந்துநிலையம் வரும் வழியில் ரெங்கம்மாள் நகர் எதிரில் தினமும் இரவு 7 மணிக்கு அரவாணிகள் மேல் கூட்டமாக சேர்ந்துவிடுகின்றனர்.

அந்தவழியே மோட்டார் சைக்கிளில் செல்வோரையும், நடந்து செல்பவர்களையும் வழிமறித்து பணம் கேட்டு பெறுகின்றனர். பணம் தர மறுப்பவர்களை அவமரியாதையாக பேசி வலுக்கட்டாயப்படுத்தி பணம் பெற்றுவருகின்றனர்.

இன்னும் சிலர் தனியாக வரும் ஆண்களை ஒதுக்கு புறமாக அழைத்து சென்று இயற்கைக்கு மாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரவாணிகள் தொல்லை குறித்து தற்போது பணியிடை பயிற்சிக்காக விடுப்பில் சென்றுள்ள மாவட்ட கலெக்டர் தரேஸ்அகமதுவிற்கும், போலீசாருக்கும் புகார்கள் சென்றது. அதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அரவாணிகளை கண்டித்தும் அனுப்பினார்.

அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அரவாணிகள் தொல்லை மீண்டும் தொடர்ந்துவருவதாக துறைமங்கலம் நான்குரோடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள், இருசக்கரவாகனங்களில் செல்வோர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு வாய்மொழியாக புகார்கள் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அரவாணிகள் நலவாழ்வுக்காக அரசு திட்டத்தின்கீழ் தனிகுடியிருப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்தநிலை அரவாணிகள் தங்களுக்கு பொதுமக்கள் கொடுத்துவரும் பணம்,பொருள்உதவி, சுதந்திரம்,
மரியாதை இவற்றை தவறாக பயன்படுத்திவருகின்றனர் என்றும்,

இன்னும் சிலர் பாலியல் தொல்லை தருவதால், இருசக்கரவாகனங்களில் செல்வோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர் என்றும் நான்குரோடு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திராவிடம் கேட்டபோது, பொதுமக்களுக்கு தொல்லை தரும் அரவாணிகளை ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளோம்.

இனியும் அரவாணிகளின் செயல்கள் தொடர்ந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நான்குரோடு பகுதியில் போலீசார் ரோந்துபணியிலும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!