பெரம்பலூர் : பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இத்தேர்வினை 5,174 மாணவர்களும், 4,475 மாணவிகளும் என மொத்தம் 9,649 பேர்கள் தேர்வெழுதினர்.

இதில் 4,888 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 9,165 மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் 94.98 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 17வது இடம்பிடித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 78 அரசுப் பள்ளிகளில் 5 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 15 உயர் நிலைப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்ததுள்ளது.

அசூர், சத்திரமனை, கல்பாடி, ஒதியம், வடக்குமாதவி, ஜமீன்பேரையூர், ஆதனூர், எழுமூர், கூடலூர், செங்குணம், வரகூர், பெரியம்மாபாளையம், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் வரிசையில் பொம்மனப்பாடி, ஈச்சம்பட்டி, பாடலூர் உள்ளிட்ட அரசு உயர் நிலைப் பள்ளிகளும், வேப்பந்தட்டை, நெற்குணம், வெங்கலம், கைகளத்தூர், தேனூர் உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 20 அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இன்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி, மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!