100 percent of the students and teachers who have passed the quarterly exam to get the praise by civil service servent

20161007 அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் காலாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்து ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் காலாண்டுத் தேர்வு முடிவுகள் குறித்தும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

காலை 10 மணிமுதல் 1 மணிவரை மேல்நிலைப் பள்ளிகளுக்கும், மதியம் 2 மணி முதல் 5 மணிவரை உயர;நிலைப்பள்ளிகளுக்குமான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
நடந்து முடிந்த காலாண்டுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 85 அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் மற்றும் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில் பாடவாரியாக 80 சதவீதத்திற்கு குறைவாகவும், 10 ஆம் வகுப்பில் 70 சதவீதத்திற்கு குறைவாகவும் பெற்ற மாணவர்கள் பயிலும் பள்ளியின் சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆசிரியரகளிடம் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்தும், மாணவர்களின் படிக்கும் திறனை அதிகரிக்க வைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

வாரநாட்களில் திங்கள் முதல் வௌ;ளி வரை ஒவ்வொரு நாளும் ஒரு பாட வாரியாக நடத்தப்படும் குறுந்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகின்றது. காலாண்டுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட குறுந் தேர்வுகளுக்கான மாணவர்களின் கையேட்டையும், காலாண்டுத் தேர்வு விடைத் தாள்களையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சிப் பணியாளர் மாணவ-மாணவிகளின் படிக்கும் திறன் மற்றும் நினைவாற்றலுடன் தேர்வு எழுதும் திறன் ஆகியவற்றையும் குறுந் தேர்வுகளின் மூலம் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். படிக்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களின் மீது சம்மந்தப்பட்ட பாடத்தின் ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி பயிற்சி கொடுக்கவேண்டும்.

இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகளில் அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்துப் பாடங்களிலும் மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெறும் நிலையை எய்திடும் வகையில் ஆசிரியர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் தெரிவித்தார்.

முன்னதாக நடைபெற்று முடிந்த காலாண்டுத் தேர்வில் பாடவாரியாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் பாட ஆசிரியர்கள் 69 நபர்களுக்கு மாவட்ட ஆட்சிப் பணியாளர் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

இக்கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!