108 Ambulance service: 37 person gets job Order

108வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன் வழங்கினார்.

தமிழக அரசு தமிழ்நாடு சுகாதார திட்டத்தின்கீழ் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனத்துடன் அவசரகால சேவைகளை புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயல்படுத்தி வருகிறது.

108 அவசர கால சேவை மையம்; சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாகாந்தி தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனத்திற்கு தேவைப்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் இன்று பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில் 150 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தகுதியான 16 நபர்கள் ஓட்டுநர் பணியிடங்களுக்கும், 21 நபர்கள் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கும் தேர்வு குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பணிநியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன் வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!